Vibavam – Parasurama Incarnation/விபவம்-பரசுராம அவதாரம்

For English version, kindly click here, thanks 

பரசுராம அவதாரம்

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

நான்கு வர்ணங்கள்

நாம் இந்த பூமியில் பிறந்தது பரமாத்மாவை அடைவதற்கே.   முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின்படி இப்பிறப்பை எடுத்து, கடவுளை அடைவதற்கு முயற்சி செய்கிறோம்.   சூத்திர, வைசிய, சத்ரிய மற்றும் பிராமண என்று நான்கு வர்ணங்களாக நம்மைப் பிரித்து, ஒவ்வொரு வர்ணத்திற்கும் உரிய கடமைகளை கொடுத்து அதன் மூலம் பரமாத்மாவை அடைய வழி செய்கிறார்.

வேதம் காட்டும் ஞானப் பாதையில் நாட்டம் கொண்டு பயின்றுப் பின் மற்றவருக்கும் ஞானத்தின் சாரத்தை எடுத்து உரைக்கும் பிரிவு தான் பிராமணன்.   சமூகத்தைத் தன் தோள் வலிமையால் காத்து நிற்கும்  பிரிவு தான் சத்ரியர்கள். வாணிகம் செய்ய விருப்பம் கொண்டு, அற வழியில் பொருள் ஈட்டி, அப்பொருளைக் கொண்டு சமூகத்தைக் காக்கும் ஒரு பிரிவு தான் வைச்யர்கள்.  நம் சமுகத்திற்கு முன்னேற்றம் அளிக்கும் பல துறைகளில் ஏதேனும் ஒன்றில் விருப்பம் கொண்டு அத்துறையில் பணி செய்து சமூகத்தைக் காக்கும் ஒரு பிரிவு தான் சூத்திரர்.

முக்கியமாக, இந்த பிரிவுகளிடையே உயர்வு தாழ்வோ, இந்த பிரிவுகளுக்குள் உட்பிரிவுகளோ இந்து தர்மத்தில், வேதத்தில், புராணங்களில், இதிகாசங்களில் சொல்லப்படவில்லை.    மேலும் ஒருவரை, அவர் பிறப்பின் அடிப்படையில் எந்த பிரிவாக இருந்தாலும், அவரது குணங்களின் அடிப்படையிலேயே இந்த பிரிவுகளுக்குள் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்கள் பிரிவுகளின் குணாதிசயங்களை கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

குண நிர்பந்தம்

சந்திர வம்சத்தில் தோன்றிய காதிராஜன் என்ற ஷத்ரிய மன்னனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை ரிசிகன் என்ற பிராமண முனிவன், தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டார். காதிராஜன், ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று நினைத்த ராஜா, சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான்.

கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதே சமயம் சத்தியவதியின் தாயான காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் பெருமாள் பிரசாதத்தை  எடுத்து அவைகளில் ஷத்ரிய, பிராமண குல பெருமைகளுக்கு தக்கவாறு மந்திர ஓதி அவர்களுக்கு ஏற்றவாறு தனித்தனியே கொடுத்தார்.   சத்யவதியின் தாயார், சத்தியவதிக்காக கொடுத்த பிரசாதத்தை தான் உண்டால், தனக்கு சத்யவதியை விட சிறந்த பிள்ளை பிறக்கும் என்று நம்பி, சத்தியவதிக்கு தெரியாமல் அதை செய்தாள்.    சத்யவதிக்கு இது தெரிய வர, அவள் முனிவரிடம் பிரசாதம் மாறிவிட்டதை சொல்லி, பிராயச்சித்தம் வேண்டினாள். முனிவரும் பிரசாதத்தின் பலனை ஒரு தலை முறை தள்ளி வைத்தார். சத்தியவதியின் தாய்க்கு பிறந்த பிள்ளைதான் விசுவாமித்திர முனிவர்.  அவர் அறிவில் பிராமண குல வழக்கப்படியும் மற்றவற்றில் ஷத்ரிய குணங்களோடும் விளங்கினார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார்.      ஜமதக்னி, ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ராமன் என்பவன் கடைசி மகனாக, பிரம்மத்தின் அம்சமாகவும் ரிசிகனின் பிரசாத்தின் பலனாகவும் அதிக ஷத்திரிய குணங்களுடன் அவதரித்தார். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன்.

சூரிய குலத்திலே பிறந்த கார்த்தவீரியன் என்ற ஆயிரம் கைகள் கொண்ட அரசன் ஒரு பராக்கிரமசாலி.   ஒரு முறை பத்து தலை கொண்ட ராவணனை ஒரு பூச்சியை போல் சிறைபிடித்து அடைத்தவன். ராவணன் கார்த்தவீரியனிடம் மன்னிப்புக் கேட்க, கார்த்தவீரியன் அவனை விடுவித்தான்.   கார்த்தவீரியன், ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களுக்கு,   ஜமதக்னி தேவ பசுவாகிய காமதேனுவால் அறுசுவை உண்டியும், பானமும்   கொடுத்தார். கார்த்தவீரியன்,அந்த பசுவை  தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர், அதை பரசுராமரிடம் கூற, பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும்  மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார்.   அரசனை கொன்ற பாவத்திற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போகச்சொல்லி பரசுராமனுக்கு அவரது தந்தை அறிவுரை சொல்ல அதைக் கேட்டு ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார்.

ரேணுகாதேவி, அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு உதவி செய்வாள்.  ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி குனிந்த போது ஒர் கந்தர்வ உருவம் நீரில் கண்டாள். இதனால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை ஜமதக்னி முனிவர் அறிந்தார்.  தன் புதல்வர்களை அழைத்து ரேணுகாதேவியை கொல்லுமாறு கட்டளை இட்டார். மற்ற பிள்ளைகள் மறுக்க, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் அன்னையையும் மற்ற சகோதரர்களையும் கொன்றார். ஜமதக்னி தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையிடம் ‘உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். பரசுராமர் இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும்  என்று வரம் கேட்டார்.  மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள். ஒரு நாள் ஜமதக்னி முனிவர் தனியே இருந்த சமயம், அவர்கள் ஜமதக்னியின் தலையை வெட்டி அந்த இடம் முழுவதும் ரத்தவெள்ளமாகும்படி செய்தனர்.  பரசுராமர் திரும்பியதும் இதனை கண்டு ஷத்ரிய குலத்தை வேரோடு அழித்துவிட சபதம் எடுத்தார்.  இருபத்தி ஒரு தலைமுறை அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குருஷேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரப்பி தன் தகப்பனாருக்கு ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தார்.

பரசுராம ஷேத்திரம்

இவ்வளவு கோபத்துடன் இருந்த பரசுராமர், அடுத்த அவதாரமான ராமரை சந்திக்கும் போது அவரிடம் கர்வபங்கப்பட்டு தன கோபத்தை எல்லாம் துறந்தார்.    பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ஷேத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது.

அடுத்தது பலராமர்.

=====================================================================

Parasurama Incarnation

In Parasurama Avatharam, Paramathma or Perumaal was born to Saint Jamathakni and Renuka Devi.   In this Avathar, Parasuramar proved a point time and again, that everyone should follow the words of his or her father at any cost. It is believed that He still lives and meditating in the western ghats of India, called Mahendra Mountains.

Four Classes of Hindu System

We are born on earth with the sole purpose of realising God and we undergo the journey, because of our deeds from previous births    Regardless of the destiny we are born with, the class system helps us in accomplishing the goal of God realisation.   As per Hindu caste systems, there are four classes defined, Shudra (labourer), Vaishya (businessman), Kshatriya (warrior) and  Brahmin (teacher) and each class has a specific role to be played in the society.

Brahmin is expected to learn the vedam and practice them in their day to day life and teaches the highlights of the same to others.   Kshatriyas are expected to protect the society through their physical strength.    Vaishhyas are expected to earn money through right ways and support the society through such earned money.   Shudras are expected to contribute to this society through their hard work in any developmental activities.

More importantly, there is no superiority or inferiority attached to any of the above classes.  And there are no further subdivisions in any of the above classes, highlighted or documented anywhere in the Hindu Systems, be it Puranams, or Ithihaasams or Vedham. An individual should be classified in a particular class irrespective of his birth if he possesses the decisive characteristic of that class   Generally the parents wanted their children to have the same qualities of themselves.

Reasons for His qualities

Sathyavathi was born to a Kshatriya King, called Kaathi Rajan.   One good Brahmin Sage, by name, Richigan, wanted to marry Sathiyavathi and he went and begged the King to get her daughter married to him.   The kind did not want to get the wrath of a good saint. Hence he decided to get daughter married to Richigan.

After some time, Sathyavathi wanted to have a child.  At the same time, her mother also wanted to have a child.  She requested Richigan, the saint, to get them the blessings from God.   The saint prayed and got the offerings from the God for each one of them according to their class of birth, namely, Sathiyavathi, being a brahmin’s wife got the offerings with Brahmin’s qualities and her mother, being the wife of a Kshatriya, got the offerings with Kshathriya qualities.    When Sathiyavathi was not around, her mother took the offerings designated for Sathiyavathi, as she thought that Richigan would have got something more special for his child.   Sathiyavathi took the other portion and when she came to know about  the exchange of the  offerings, the  saint was unhappy.   Sathiyavathi requested for a redress.   Richigan, the saint, after a bit of hesitation, postponed the the effects of the offerings for her alone by a generation, which means that there would not be any effect to Sathiyavathi’s child, but her grandchild would be born with the qualities of Kshatriya. Sathiyavathi’s mother gave birth to a child, which became a famous saint Vishwaamithirar.   He had the interests and knowledge, as per Brahmin, but all other qualities were like Kshatriya.

Listening to Father’s words at any cost

Jamathagni was born to Sathiyavathi and Richagan and he married Renuka Devi.   Raman was born to Jamathagini and Renuka Devi as their last son.   Raman is an incarnation of Lord Narayanan.  He prayed Siva and got an axe called Parasu.   Then He was given the name Parasuraman.   He had lots of respects, love and affection to their parents.

Kaartha Veeryan was a very brave king and he used to have  one thousand hands.   He once even captured the King Ravana .  Ravanan, after knowing the strengths, apologised to Kaartha Veeryan and he released Ravana.    Such a strong Kaarthaveeryan, once happen to visit Jamathagni’s Ashram with his battalion of soldiers.    They were all hungry and tired Jamathagni had a pious cow, called Kamadenu, which can give anything and also continuously.  Jamathagini gave the King and the soldiers a very tasty and sumptuous food and drinks, using Kamadenu.    Kaartha Veeryan wanted to take Kamadenu and he ordered his soldiers to capture the cow to his palace.     Parasurama came to know about this and He fought with Kaarthaveeryan.   He beat all his soldiers and also removed all the one thousand hands of Kaarthaveeryan.     In addition He killed the king and retrieved Kamadenu.   He brought back Kamadenu to his father, Jamathagini.  Jamathagini advised Parasuraman that killing a King is a bad deed and needs to be cleansed by visiting selected temples.   Parasuraman listened to his father’s advice and started his Holy Journey (Theertha Yaathirai) for the next one year.

Renuka Devi used to help her husband, Jamathagni in his preparations for Pooja.  One day when she was in a pond, she saw  the shadow of a Gandharva,  in the water and she could not concentrate further and contribute to Jamathakni’s prayers.   On hearing this, Jamathakni got angry, as he felt that Renuka Devi lost her chasteness and asked his sons, one after other, to kill his wife.   All children refused to accept such order from their father, but for Parasuraman.   Parasuraman accepted the order and killed not only Renuka Devi, but also, the brothers who refused to listen to his father.   Jamathakni was happy with Parasurama, as He had carried out his orders.  Jamathakni offered him a boon and Parasurama without hesitation asked Jamathakni to give lives for the dead mother and brothers.   Jamathakni made them come back alive.   Since Renuka Devi’s head was chopped off and came back again, she is called Marri amman and in temples, her head alone is kept for prayers. And these are believed to be due to Parasurama Incarnation.

Having lost their father, Kaarthaveeriyan’s sons were waiting for opportunity to take revenge on Jamathakni and Parasuramar.    When Jamathakni was alone, they went and cut his head and made the whole place filled with blood.  When Parasurama returned He saw his father, being killed so cruelly,  He took a vow to kill all in Kshathriya class.   He killed 21 generations of Kshathriya kings and He racked up the whole place with heads of such Kshathriyas.   Instead of water, blood flowed in the  river and in Guruskshetram, a place in North India, He filled the tanks with blood.   He used the blood, instead of water, to do the last rights for His father.    By killing 21 generations of Kshathirya He made sure that there is no one from Kshatriya is left in this world.

Parasuraama Kshethram

Having had so much anger in Him, Parasuramar left all His anger when He met Rama in the next incarnation.    He went to the western side of India and used His axe to rectify the land and today this place is called Kerala.  This is also called as Parasurama Kshethram.

Let us start learning about Sri Balaraamar in the next weblog.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading