Vibavam – Matsya, Koorma Varaga Incarnations/விபவம்-மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்

For English version, please click here, thanks 

விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் முக்கியமாக ராமவதாரம், கிருஷ்ணாவதாரம் மற்றும் வாமனாவதாரம் பற்றி நிறையவே பார்த்தும் கேட்டும் இருப்போம்.  ஆகையால் அவைகளை விட்டு விட்டு மற்ற அவதாரங்களை பற்றி சிறிது பார்ப்போம்.

மத்ஸ்யாவதாரம்

மத்ஸ்யாவதாரம், தசாவதாரத்தில் திருமால் எடுத்த முதல் அவதாரமாக சொல்லப் படுகிறது. மத்ஸ்யம் என்றால் மீன் என்று பொருள். ஹயக்கிரீவன் என்ற அசுரன் பிரம்மா தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவர அந்த வேதங்களைத் திருடி, அவற்றை ஒளித்து மறைத்து விட்டான்.

மகாப் பிரளயம் வர ஏழு நாட்கள் முன்னதாக அதாவது, இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து கடலுக்கு இரையாகி உலகங்கள் அழிவதற்கு முன், சப்த ரிஷிகளையும், மூலிகைகளையும், பற்பல வித்துகளையும், பெருமாள் மீன்  உருக்கொண்டு அவை எல்லாவற்றையும் ஒரு படகில் வைத்து சத்யவிரதன் என்ற ராஜரிஷியை கொண்டு காப்பாற்ற எண்ணினார்.

மஹா பிரளயத்தின் போது மீனான பெருமாள் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார்.  மகா பிரளயத்தில் மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த அசுரனைக் கொன்று, சப்த ரிஷிகளையும், மூலிகைகளையும், பற்பல வித்துகளையும் வேதத்தையும் மச்சாவதாரப் பெருமாள் காப்பாற்றினார். வேதத்தை பிரம்மாவிடம் திருப்பிக் கொடுத்தார்.   பிரம்மாவும் தன்னுடைய ஸ்ருஷ்டியை தொடர்ந்தார். சத்யவிரதனையும் ஒரு மனுவாக நியமித்தார்.

கூர்மாவதாரம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம், கூர்மாவதாரம்.

பெருமாள்  மந்திர மலையைக் கருடன் மீது தூக்கிவந்து பாற்கடலின் நடுவே கீழே இறக்கினார்.  வாசுகி என்ற பாம்பு கயிறானது.   தேவர்கள் பாம்பின் வால்பக்கமும், அசுரர்கள் தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மலையோ அதனுடைய பெரும் பாரத்தால் கடலுக்குள் மூழ்கியது. உடனே பகவான் ஆமையாக அவதாரம் எடுத்து மந்திரமலையைத் தன் முதுகால் தாங்கிக் கொண்டார்.

பார்கடல்

பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் வர, சிவபெருமான் விஷத்தைப் பருகினார். தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீமகாவிஷ்ணுவை அடைந்தாள்.(அமுதினில் வந்த பெண் அமுது) அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார்.

அமிர்த கலசத்தை அசுரர்கள் பிடுங்கி ஓட, பெருமாள்  மிக அழகுடைய பெண் வடிவில் மோகனியாக அவதாரம் எடுத்து அவர்களிடம் இருந்து தந்திரமாக அமிர்தத்தை கைப்பற்றினார். பிறகு தானே அமிர்தத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கொடுப்பதாக சொல்லி, முதலில் அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தார். சூரியன், சந்திரன் என்ற இரண்டு தேவர்களுக்கு நடுவில் வந்த ராகு என்ற அசுரனை பார்த்த மோகினி, அந்த அசுரனை தன்கையில் உள்ள அகப்பையால் தட்ட அந்த அசுரன் ராகு கேது என்ற இரண்டு கிரகங்கள் ஆனார்கள். அதுமுதல், அவர்கள், சூரியனையும், சந்திரனையும் பிடிக்க முயற்சி செய்து, சூரிய சந்திர கிரகணங்களுக்கு காரணமாகின்றனர்.

மோகினியாகவும், தன்வந்திரியாகவும், ஆமையாகவும் தானே வந்து அமுதில் வந்த பெண் அமுதை ஏற்றுக்கொண்ட அவதாரம் தான் கூர்மாவதாரம்.

வராகவதாரம்

பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் என்ற அசுரன் அதனை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

சிருஷ்டி என்பது இருவகைப்படும். முதலில் பிரம்மம் தாமாகவே சங்கல்பித்து பஞ்சபூதங்களையும், ஐம்புலன்களையும்  படைத்தார். இதற்குப்பின் தான் பிரமனை படைத்தார்.  பிரம்மத்தின் ஆணைப்படி தாவரங்கள், விலங்குகள், தேவர்கள் என அனைத்தையும் பிரமன் படைத்தார்.  பிரமன் புருவங்களின் நடுவிலிருந்து ருத்திரன் அல்லது சிவன் தோன்றினார்.

பூமியில் மானிடர்களைப் படைக்க வேண்டும் என்று எண்ணிய சமயத்தில், இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். பிரம்மா மகாவிஷ்ணுவிடம் சமுத்திரத்தில் அமிழ்ந்து இருக்கும் பூமியை வெளிக்கொண்டு வர பிரார்த்தனை செய்தார்.    மகாவிஷ்ணு பிரம்மாவின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, வராக அவதாரம் எடுத்தார்.  பகவான் வராக மூர்த்தியாக எழுந்தருளி ஹிரண்யாட்சன் என்ற அசுரனுடன் போரிட்டு அவனை வென்று, தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியை வெளிக்கொணர்ந்து நிலை நிறுத்தினார்.

நீரில் இருந்து வெளிவந்த பூமாதேவி தாயார், வராகபெருமானின் மடியில் அமர்ந்து, நம் பொருட்டு, “நம் குழந்தைகளாகிய இந்த பூமியின் பிரஜைகள் உய்வதற்கு வழி என்ன” என்று கேட்க பகவான் நம் மேல் உள்ள கருணையினால், “அவர் கொடுத்த கைகளினால் தூய மலர்களை தூவி, அவர் கொடுத்த வாயினால் பாடி, அவர் கொடுத்த மனத்தினால் அவரை சிந்திக்க வேண்டும்” என்று காட்டிக்கொடுக்கிறார்.   இதை நமக்கு திருப்பாவை என்ற திவ்ய பிரபந்தந்தின் மூலம், பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் கொடுக்கிறார்.

அதேபோல் நாம சாமகீர்த்தனம் மூலம் தன்னை அடையலாம், மற்றும் அதை கைசிக பண் கொண்டு தன் திருத்தலங்களில் கைசிக ஏகாதசி போன்ற சிறப்பு நாட்களில் தன் முன் பாடுவதால் அதை கேட்பவர்களையும் உய்ய செய்யலாம் என்பதை நம்பாடுவான் என்பவனின் சரித்திரத்தை பூமிபிராட்டியிடம் சொல்லி கைசிக ஏகாதசியின் சிறப்பை சொல்லும் கைசிக மஹாத்மியம் வராக புராணத்தில் உள்ளது.

பரமாத்மா மூன்று சரம ஸ்லோகங்களின் மூலம் நமக்கு தன்னை அடையும் வழியை சொல்லுகிறார்.  வராக, இராம, கிருஷ்ண அவதாரங்களில் அவைகள் உள்ளன.

ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||”

என்பது வராஹப் பெருமானின் சரம ஸ்லோகம் ஆகும். இதன் பொருள்,   வராக சரம ஸ்லோகம் சொல்வதாவது – நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!.

விபவ நிலையில் உள்ள தசாவதாரத்தின் நரசிம்ம பரசுராம, பலராம மற்றும் கல்கி அவதாரங்களைப் பற்றியும், அர்ச்சை மற்றும் அந்தர்யாமி நிலைகளை பற்றியும் வரும் பதிப்புகளில் காணலாம்.

==========================================================================

Vibhavam

We would have heard about  Dasaavathaaram (Ten Incarnations) in Vibhavam.   Rama, Krishna and Vamana Avatharams (incarnations) are more often referred and we would have read and heard more about them also.   Hence we will leave them and discuss about the other Incarnations. here.

Mathsyavathaaram

Mathsyavatharam (Fish Incarnation) is placed as the first Incarnation in Dasavatharam. Hayagreevan, a demon, took away the Vedhams, (The Rule Book)  which came out of Brahmaa and he had hidden it under water.   Without the Vedhams, Brahmma could not proceed with his job.

As discussed earlier, Mahapralayam is one in which all the 14 worlds get immersed in water and during this incarnation, Mahapralayam happens.   About 7 days before Mahapralayam,  Mahavishnu, starts this incarnation in the form of a small fish.   He gave the opportunity to a very pious sage, by name, Satyavradan,  to hold a boat, where He organised seven other important sages, called Saptharishis,  some important herbs and many important seeds during Mahapralayam.  He Himself became a very big whale and He asked Satyavradan to tie the boat to the dorsal Fin of the Whale so that those can be protected during Mahapralayam.

Mahavishnu looked like a big Golden Whale during Mahapralayam.    Perumal killed the demon, who stole the Vedam and kept it under the sea.   Thus during Mathsyavathaaram, Sri Mahavishnu killed the demon and saved the important sages.  He also retrieved the Vedam and handed it over back to Bramma for continuing the Creation. He also made Sathyavrdan as a Manu, a high level Administrator.

Koormaavathaaram

Perumaal took the form of a Giant turtle  to carry a mountain by name, Manthramalai, when the good Devas from the Celestial world, and Asuras (super natural but evil ) churned the  milky ocean to get the Amirtham, ( Nectar ) the antidote to live for ever.   This incarnation of Turtle is called Koormaavathaaram.

Garudan, the bird  vehicle of Sri Mahavishnu, carried the mountain, Manthramalai, and placed it into the Milky Ocean.    The most significant single headed snake, Vasuki, became the rope that was used to churn the mountain.   The bad Asuras took the head portion of Vasuki and the good from the Celestial took the tail portion of the rope while churning.   The moment they started the churning, the mountain, because of its weight, drowned into the milky ocean.   Immediately Perumaal took the incarnation of Tortoise and carried the mountain on His back.

When the ocean  was churned, the following special, rare items came out.

 • Deadly Poison (Aalakala Visham) – this was consumed by God Siva
 • Kamadenu – A special cow, an animal that is capable of giving anything
 • White Horse
 • Red gemstone
 • Ayraavatham – The White Elephant
 • The tree  Parijaatham, Nyctanthes arbor-tristis, the night-flowering jasmine or Night Queen

Then Sri Mahalakshmi came and  walked directly towards Mahavishnu and reached Him. Finally The Amirtham, was brought by Dhanvanthri, another incarnation of Sri Mahavishnu in a golden pot.

The evil Asuras robbed the golden pot and ran.   Perumaal took another form, a beautiful woman , Mohini Avatar. She started talking to the Asuras , who took the golden pot. They were attracted by her beauty, and gave the pot to Mohini and asked Her to distribute.   She distributed the whole Amirtham only to the good from the Celestial world. Seeing that the bad is not getting any Amirtham, Raaghu, one of the bad, came in between two from the good celestial world, Sun and Moon.  Mohini knew that Raaghu was an Asura and She hit Raaghu with the spoon and then Raaghu split into two, namely Raaghu and Kethu. Eversince, they started chasing Sun and Moon and became part of the reasons for the Solar and Lunar Eclipses.

Perumal Himself came as Dhanvantri, Mohini and the Turtle in this Koormaavathaaram, and He also took Sri Mahalakshmi, who came out of the Milky Sea.

Varaaha Avathaaram

Hiranyakshakan, a demon, took the world and hid it under the sea.   Perumaal appeared as White wild boar (Varahavathaarm), killed the demon and kept the world on His giant canine like tooths.

There are two types of creations used by Brahmam while establishing or forming the whole universe.    Some of the things He creates Himself on His own desire and intent.   After creating the basic infrastructure, He will leave the rest of the creation to Bramma for further creation.   The creation of Brahmam are :

 • Panchabhootham, the five basic elements, the earth, water, fire, wind and the outer space
 • Ethereal or certain things that connect the above basic elements to our senses, namely, sight, hearing, taste, smell and touch.

The creation of Bramma under the guidance of Brahmmam are :

 • the plants
 • animals
 • The good at the Celestial world
 • Siva

By the time, Bramma was about to start creating human beings, the demon Hiranyakshakan carried away the world, where the human beings are supposed to be staged. The demon also hid the world under the sea.   Bramma prayed to Mahavishnu to help him to get the world from the under waters.    Mahavishnu wanted to answer the prayers of Bramma and hence He took the Varaha Avathaaram.     As Varaahaswami or Varahamoorthi, He fought with Hiranyakshakan and won.  Then he brought the world from the waters and kept the world in its proper place within the Universe.

The world is called Bhooma Devi Thayar in Vaishnavism.   Perumaal is always associated with Sri Devi and Bhoo Devi Thayaars.   Both of them give us the protection by recommending us to Him.   Thus when Bhoomadevi was retrieved from the sea waters, She sat on Sri Varahaperumaal and asked Perumaal, on our behalf, to tell Her on how the jeevathamaas, all Her children, will survive and reach Mokshham or State of Non-return.   Perumaal, with abundance of love towards us, told  “shower flowers on Him using the hands given to us by Him,  praise Him by singing his songs through the mouth, given by Him and keep thinking about Him, using the Mind given  by Him“.     Later when Bhoomadevi took the role of an Azhwaar, Aandal, She recalled and reinstated this in Thirupaavai, one of the  sections in Divya Prabhandam.

In the same way, Varaha Perumal told that Namasamkeeerthanam, that is reciting His holy names, would be another way to reach Him. Further if the Namasamkeerthanam is done using Kaisika ragam and sung in front of Him, in a temple on a special day like Kaisika Ekadasi, those who hear the same would also get the benefit of reaching Mukthi or abode. Varagha Perumal illustrated this by explaining the history of Nambaaduvaan to Bhoomadevi Thayaar, in a chapter called Kaisika Mahathmiyam, within Varaha Puranam.

Paramathma gives advices as Charama Solkams in three of his incarnations, namely, Varaaha, Rama and Krishna, to reach Him.

Lord Varaha addresses Mother Earth or Bhoodevi in his Charama Slokam, “If anyone thinks of Me, when the mind is sound (sthite manasi),with the body in  good health (suswasthe shareere), and with all mental and physical faculties working perfectly and intact (dhaatusaamye sthite) – thinks that I am indeed the very cause of this universe  (or the form of this universe, vishwaroopam), that I am without birth (ajam) – then I assure (You, Devi) that I will remember this devotee of Mine when he/she is on his/her deathbed,  lying (helplessly) like a stone or a log of wood, and  personally take him/her to the Supreme Abode.

We still need to see Narasimha, Parsurama, Balarama and Kalki incarnations under Vibhavam and then move on to Archai and Antharyammi, the remaining states of Brahmam.    Let us see them in the subsequent blogs.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: