A Simple Devotee's Views
For English Version, kindly click here, thanks
ஒரு நாள் சிவ பெருமான் தன் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் சென்ற போது, கீழே திருமழிசை ஆழ்வார் இருப்பதைப் பார்த்து அவரை சந்திக்க ஆசை பட்டார். சிவபெருமான், ஆழ்வார் விஷ்ணு பக்தர், நம்மை சந்திக்க மாட்டார் என்றுஅவர் சொல்லியும் பார்வதி விரும்ப, சிவன் கீழே இறங்கினார். ஆழ்வாரிடம் சென்று தான் அவருக்கு வரம் கொடுக்க விரும்புவதாகவும் என்ன வரம் வேண்டும் என்றும் கேட்டார். ஆழ்வார் அவரிடம் இருந்து ஒன்றும் வேண்டாம் எனவும், சிவபெருமான் ஏதாவது கேளும் என்று தொடர்ந்து வலியுறுத்தவும் ஆழ்வார் தனக்கு மோட்ஷம் வேண்டும் என்று பிரார்த்திக்க அது தன்னால் கொடுக்க இயலாது என்றார். ஆழ்வார் அதற்கு ஒரு ஊசியும் நூலும் கொடுத்து அந்த நூலை ஊசிக்குள் கோர்க்கச் சொல்லி அதுவே அவர் போன்ற மற்ற தேவதைகளால் முடியும் என்றுசொன்னார். சிவபெருமான் கோபம் கொண்டு ஆழ்வாரை தனது மூன்றாவது கண்ணால் எரிப்பேன் என்று மூன்றாவது கண்ணை திறக்க, ஆழ்வாரும் தனக்கும் மூன்றாவது கண் உள்ளது என்று கூறி, தன வலது கால் பெருவிரலில் உள்ள கண்ணை திறக்கவும், அங்கே பெரிய தீக்கனல் உருவாக, பெருமாள் அருளால் வருண தேவனால் பெருமழை ஏற்பட்டு அந்த விபரீதம் தடுக்கப் பட்டது. சிவபெருமான் பார்வதியிடம், எம்பெருமான் பக்தர்களிடம் நாம் அபசாரப் படலாகாது”என்று கூறிச் சென்றனன். இன்றும் சென்னைக்கு அருகில் உள்ள, திருமழிசை ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் ஆலயத்தில் ஆழ்வாரின் பெருவிரலில் மூன்றாவது கண்ணை தரிசிக்கலாம்.
திருமழிசை ஆழ்வார் குடந்தை சென்று பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்ய எண்ணி அங்கு செல்கிறார். போகும் வழியில் ஒரு வைதீக கோஷ்டி, வேத பாராயணம் செய்து கொண்டு வருகிறது. ஆழ்வாரைப் பார்த்ததும், அவரைப்பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டு, அவர் காதில் வேதம் விழக்கூடாது என்று எண்ணி, வேதம் சொல்வதை நிறுத்தி விட்டது. ஆழ்வாரைத் தாண்டி சென்றவுடன், பாராயண கோஷ்டி வேதம் சொல்ல தொடங்க வேண்டும், ஆனால் அவர்களுக்கு எங்கு விட்டோம், என்று நினைவு வரவில்லை. ஆழ்வார், ஒரு நெல்லை எடுத்து இரண்டாக பிளந்து காட்டினார். அது சரியாக தங்கள் விட்ட இடத்தை அந்த வேத விற்பன்னர்களுக்குக் காட்டியது. வேத கோஷ்டி, அப்படியே ஆச்சர்யத்தில் மூழ்கி ஆழ்வாரிடம் சென்று அவரின் பெருமையை உணர்ந்து, தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.
ஆழ்வார் கோவிலை சுற்றி போகும் போது ஒரு அதிசயம் நடந்தது. அதாவது ஆழ்வார் போகும் திசையெல்லாம் கோவிலில் இருக்கும் பெருமாளும் இவர் போகும் திசை பார்த்து திரும்பியபடி இருக்க, அதை கண்ட கோவில் பட்டாச்சார், அங்குள்ள மற்றவர்களுக்கு சொல்ல, அவர்கள் ஆழ்வாரின் பெருமையை அறிந்து அவருக்கு மரியாதை செய்தனர். இதை ஒரு சிலர் எதிர்க்க, ஆழ்வார் தன் மார்பில் பெருமாள், தாயாருடன், திருப்பாற்கடல் சேவையை காண்பிக்க, அனைவரும் அங்கேயே ஆழ்வாரிடம் சரண் அடைந்தனர்.
ஆழ்வார் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து குடந்தை நகர் சென்றார். ஆழ்வார் குடந்தை ஆராவமுதனுக்கு மங்களாசாசனம் செய்ய ஆரம்பித்தார்.
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
குடந்தை கிடந்த பெருமாளையே, ஆழ்வார், தான் பெரியவன், உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன், நீ படுத்துக்கொண்டு உள்ளாயே, ”எழுந்திருந்து பேசு வாழி கேசனே ” என்று கூறுகிறார். திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், பக்திஸாரர் என்றும் போற்றப்படும் திருமழிசை ஆழ்வாரின், “எழுந்திருந்து பேசு ” என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க, பாதி எழுந்து அத்திருக்கோலத்திலேயே (தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத்தில்) (உத்தான சயனம்) அருள் பாலிக்கிறான். ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.
குடந்தை மூலவர்
ஆழ்வாரும் ஆராவமுதனும் பரஸ்பரம் அன்பு பாராட்டி தங்கள் பெயரின் கடைசி பகுதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர். அதாவது ஆராவமுத பிரான், திருமழிசையாழ்வார் என்று உள்ள தங்கள் பெயர்களை ஆராவமுத ஆழ்வார் என்றும் திருமழிசை பிரான் என்றும் மாற்றிக்கொண்டனர். பிரான் என்றால் அளப்பரிய உதவி செய்பவன் என்று பொருள்.
திருக்குடந்தை சென்ற ஆழ்வார் தம் கிரந்தச் சுவடிகள் யாவற்றையும் காவிரியாற்றில் எறிய எம்பெருமானின் திருவுளப்படி, நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் எனும் ப்ரபந்தங்களைக் கொண்ட இரு ஓலைச்சுவடிகளும் நீரின் போக்கை எதிர்த்து வந்து நின்றன. ஆகையால் இன்று அந்த இரண்டு பிரபந்தங்களே உள்ளன. இவரது பல பாடல்கள் சந்தம் என்னும் வகையில் நல்ல இசையில் ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ளன. அதேபோல் ஆழ்வாரின் பாடல்களில் ஒன்று இரண்டும் மூன்று என்று எண்ணிக்கைகள் அதிகம் இருக்கும். ஆழ்வார் பகவானின் ஐந்து நிலைகளில் (பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை) ஒன்றான அந்தர்யாமி என்ற நிலையைப் பற்றி அதிகம் பாடி உள்ளார்.
ஆழ்வார் பல காலம் வாழ்ந்து நமக்கு நல வழி காட்டிஉள்ளார். ஆழ்வார் திருவடிகளே சரணம்.
இனி ஆழ்வார்கள் கோஷ்டிக்கு தலைவர் எனப்படும் சடகோபன் என்கிற நம்மாழ்வார் அவர்களை பற்றி காண்போம்.
==========================================================================
One day, Lord Siva was flying with His wife Parvathi on his Taurus vehicle passing by Thirumazhisai Azhwaar on the ground. Parvathi wanted to meet Azhwaar. Lord Siva told Parvathi that Azhwaar being a Vishnu follower, he would not want to meet them. Parvathi insisted and Lord Siva decided to get down. He came down and He told Azhwaar that He would want to give him His blessings and a boon to Azhwaar. Azhwaar said that he did not want anything from Him. Lord Siva insisted and Azhwaar asked for Motsham, the state of non-birth. Lord Siva politely refused his request and told him that Motsham could only be given by Lord Vishnu and asked him to request for something else. Azhwaar gave Him a needle and a thread and asked Him to insert the thread into the needle, meaning that all other Gods can only do such inconsequential jobs. Lord Siva got angry and He opened His third eye and in return Azhwaar told Siva that Azhwaar also had a third eye in his right foot index finger. When both the third eyes were opened, there was a big fire and with the Grace of Lord Vishnu, who asked Varunan to pore heavy rain to stop the fire. Lord Siva told Parvathi that they should not disrespect Vishnu Bakthas and disappeared from the scene. Even today, we can have the dharsan of the third eye of Azhwaar in Sri Jagannatha Perumal Temple in Thirumazhisai, the birthplace of Azhwaar, near Chennai.
Thirumazhiazhwaar decided to go to Kumbakonam to have a dharsan and prayers of Aaravamutha perumal. When he was on his way, one group of people who were chanting Vedas were going past him. Suddenly they stopped the chanting, because, they were not having a good opinion on Azhwaar and they thought the holy chanting should not fall into the ears of Azhwaar. After they passed Azhwaar, they wanted to restart from where they left. They could not, as they have forgotten where they left the chanting. Azhwaar took a raw rice grain and showed them by splitting the same into two to indicate where they left. The group of people realised that Azhwaar knows Veda and he had listened to them. They went back and requested Azhwaar to excuse them for their mistakes.
The priest in the temple noticed something strange, that the Perumal was turning his face in almost all directions. The priest called all others and others also saw this. All found that Azhwaar was going around the temple and Perumal was turning his face in the same direction in which Azhwaar was walking. Many invited Azhwaar into the temple and offered him the respects. Some people did not like this and they protested against offering respects to Azhwaar. Azhwaar wanted to bless all of them, by demonstrating who is inside his heart, the show of Sri Mahavishnu with Sri Mahalakshmi , on Aathiseshan (the five headed serpent), on the Sea (Thiruparkadal). All, including those who protested, fell in front of Azhwaar, as a mark of surrender.
Azhwaar continued his journey to Kumbakonam and reached Kumbakonam. He started his prayers with Sri Aaravamudan. Suddenly he realised that he was so old and the Perumal looks so young, and why He was lying in front of him and asked Him to get up and talk (kidanthavaaru ezhunthirunthu pesu), in one of his hymns. Perumal started to get up and immediately Azhwaar realised and blessed him (vazhi kesane). Even today, at Kumbakonam temple, the perumaal, Aaraavamudan is in a posture of about to be getting up with His hands folded to lift His head (UTHAANA SAYANAM).
“Nadantha Kaalgal Nonthavo ? Nadunga Gnaalam enamaai, idantha mei kulungavo, ilangumal varai suram, kadal parantha kaverikarai kudanthaiul, kidanthavaaru ezhunthirunthu pesu, vazhi kesane“
Aaravamudan and Azhwaar became very close and they went to the extent of exchanging their last part of the names. Aaravamutha Piraan and Thirumazhisai Azhwaar exchanged their names as Aaravamutha Azhwaar and Thirumazhisai Piraan. Piraan means a person who does lot of help to others.
When Azhwaar went to Kumbakonam, he threw all treatise, his many years of work, into Cauvery. Against the flow of the water, two of his works or Prabhandams, Naanmugam Thiruvanthathi and Thiruchanthavirutham, came back and reached Azhwaar as per the wishes of Perumal. Many of his hymns are built on a structure called “santham”, which reverberates with nicely placed high and low notes. Azhwaar has also used numbers like one, two, three etc in many of his hymns. Finally many of Azhwaars hymns are towards The Inner Soul (Antharyaami), one of the five states of Mahavishnu (Paramapatham, Viyugam, Vibhavam, Antharyaami and Archai).
Azhwaar lived long and showed us the path of Sri Emperumaal. Azhwaar Thiruvadegaley Saranam.
With this, let us proceed to learn about Sri Sadagopan or Nammazhwaar, who is regaded as the Chief for all Azhwaars.