Achuthan, Solid or unwavering support /அச்சுதன், நழுவுதல் இல்லாதவன்

For English Version, kindly click here, thanks

மகாலட்சுமி தான் அத்தனை ஜீவாத்மாக்களுடைய சரணாகதிகளையும் பெருமாளிடம் பரிந்துரை செய்கிறாள்.   அவள், சரணாகதி அடைந்தவர்களை, மகாவிஷ்ணு எப்படி விடாமல் காத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நம் போன்றவர்களுக்கு தெரியப்படுத்த ஒரு குறிப்பு.

ராமாயணம் முடிந்த பிறகு, ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ மகாலட்சுமி பிராட்டியும், பரமபதத்தில் (ஸ்ரீ வைகுண்டம்) பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.     பிராட்டி, நீங்கள் ஏன், ஸ்ரீரங்கத்தில் தெற்கு நோக்கி பள்ளிகொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க, பெருமாளும், நம் பிள்ளை விபிஷணன் அரசாண்டு வருகிற இலங்கையை கடாஷிக்கவே அப்படி சயனிதுள்ளேன் என்கிறார். விபிஷணன், ராமாயணத்தில் ஸ்ரீ சீதாதேவியை வஞ்சகமாக தூக்கிசென்ற இராவணனின் சகோதரன், நல்லவன்.

பிராட்டி, மேலும் விஷ்ணுவை சோதிக்க எண்ணி, தான் அசோகவனத்தில் இருந்த போது, விபிஷணன் பிராட்டியை பற்றி சொன்ன சொற்களை நினைவு கூறுகிறாள். பிராட்டி தரிசனம் வேண்டி கோடானுகோடி தேவர்களும், பிரமன், ருத்ரன், இந்திரன் போன்றவர்களும் கூட காத்துக்கொண்டு இருக்கும் போது, விபிஷணன் தன்னை துர்சகுனமாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, விபிஷ்ணனை தொடர்ந்து ரட்சிக்க வேண்டுமா என்று வினவுகிறாள்.

விபிஷணன், இராவணனிடத்தில், சீதாபிராட்டியை விட்டு விடும் படி கூற, அதற்கு இராவணன் மறுக்க, விபிஷ்ணனும் இந்த சீதாபிராட்டி இலங்கை  வந்ததில் இருந்து நாட்டிற்கு ஒரே அபசகுணங்களாகவே நிகழ்வதாகவும், அதனால் தான் சீதா பிராட்டியை கொண்டு விடும் படியும் சொல்லவதாக சொன்னான்.   இராவணன் அப்படி என்ன அபசகுணங்கள் என்று வினவ, விபிஷணன், அசோகவனத்தில் மரங்கள் துவம்சம் செய்யப்பட்டதையும் இலங்கை  முழுவதும் தீப்பற்றி எரிந்ததையும் உதாரணங்களாக சொன்னனான்.  அப்படியும் ராவணன் கேட்கவில்லை, தன் சகோதரனை விட்டு பிரிந்த விபிஷ்ணன்  ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைந்தது ஒரு சரித்திரம்.

மகாவிஷ்ணு, பிராட்டியிடம்,விபிஷணன் அப்படி சொல்லி இருக்க மாட்டான், அப்படி சொல்லி இருந்தாலும், ஆனால் அது நன்மை செய்வதற்கே இருக்கும்.    அப்படி சொன்னாலாவது, இராவணன் பிராட்டியை, பெருமாளுடன் சேர்த்து விடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கும் என்றார்.     பிராட்டி இதை கேட்டு ரசித்து, இவன் அச்சுதனே, இவனை அடைந்தவர்களை விட்டு விட மாட்டான் என்று பெருமை கொள்கிறாள்.

இதில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று,   அந்த ஜீவாத்மாகளை ஏற்றுக்கொண்ட பிறகு அவன், பிராட்டியே சொன்னாலும் கைவிடுவதில்லை என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.    இதை எங்கே கண்டோம் எனில், பெரியாழ்வாரின் பாடல் ஒன்றில்,

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைககுமேல், என்னடியார் அது செய்யார்; செய்தாறேல் நன்று செய்தார் என்பர் போலும், மன்னுடைய விபீடண ற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வாய்த்த, என்னுடைய திருவரங்கற்கன்றியும், மற்றொருவருக்கு ஆள் ஆவாரே (பெரியாழ்வார் திருமொழி, 4.9.2)

கூறுகிறார்.       இதில் இருந்தே அவன் அச்சுதன், நழுவதல் இல்லாதவன் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

”சரணாகதி”

( நன்றி whatsapp group நண்பர்கள்)

ஸ்ரீராமாநுஜரின் முதன்மைச் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வானின் திருமகன் பராசர பட்டர் ஆவார். ரங்கநாயகித் தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள். அவர் ஒருமுறை காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாமையால், அவரைத் தேடிச் சென்ற சீடர்கள் காட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரைத் தேற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மயக்கம் தெளிந்து பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? காட்டுவாசிகளால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டானதா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.

“ஒன்றுமே இல்லை! நான் ஒரு காட்சியைக் கண்டேன் அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்!” என்றார் பட்டர். “என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். “ஒரு வேடன் ஒரு முயல் குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப் பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றான். இதைக் கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச் சென்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன் முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான்.

இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன்!” என்றார் பட்டர். “இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டார்கள் சீடர்கள். “என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? அதற்கும் வாய்ப்பில்லை. ஆனாலும், அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து, அது கேட்டதைத் தந்து விட்டான் அல்லவா?

சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படிக் கருணை காட்டுகிறான் என்றால், சரணாகத வத்சலனான எம்பெருமான், அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்? அவனே கதி என்று அவனைப்பற்றிய நம்மைக் கைவிடுவானா? எம்பெருமானின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல் இத்தனை காலம் வீணாகக் கழித்து விட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி இன்னும் என் மனத்தில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்து விட்டேன்!” என்று விடையளித்தார் பட்டர். விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்.

வடமொழியில் ‘ச்யுத’ என்றால் நழுவ விடுதல் என்று பொருள். ‘அச்யுத:’ என்றால் நழுவ விடாதவன் என்று பொருள். சரணம் என்று தன்னை அண்டியவர்களை நழுவ விடாமல் கைவிடாமல் காத்தருளுவதால் திருமால் ‘அச்யுத:’ என்றழைக்கப்படுகிறார்.

இந்தத் திருநாமத்தின் பொருளை விளக்கும் விதமாகவே திருமலையப்பன் எழுந்தருளியுள்ளார். அவர் தனது வலது திருக்கையைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, அந்தத் திருவடிகளில் சரணாகதி செய்யச் சொல்கிறார். இடது திருக்கையைத் தொடையில் வைத்துக் கொண்டு, “நீ அவ்வாறு சரணாகதி செய்தால் பிறவிப் பெருங்கடலையே தொடையளவு வற்றச் செய்வேன். உன்னைக் கைவிடாமல் காப்பேன்!” என உறுதி அளிக்கிறார். அடியார்களை எந்நிலையிலும் திருமால் கைவிடாமல் காத்தருளுவார்.

இதேபோல் அவனது இன்னொரு பிரசித்திபெற்ற நாமமான கோவிந்தனைப் பற்றி இங்கே காணலாம்.

==========================================================================

Achuthan

Sri Mahalakshmi, recommends all Jeevathmaas who come to her for Saranagathi to Sri Mahavishnu.   Saranagathi is requesting moksham or a state where there is no re-birth.   She wanted us to know how Sri Mahavishnu holds the Jeevathmaas, like us, firmly after giving the Saranagathi, by the following script.

After the days of Ramayana, Sri Mahalakshmi and Sri Mahavishnu were having a conversation in Srivaikundam or paramapatham.    Mahalakshmi asked Sri Mahavishnu on why he was facing South, in reclining  posture in Srirangam, .     Mahavishnu, told her that He wanted to bless Vibhishnan and his country.  Vibhishnan, who was ruling Srilanka, a good brother of bad Ravana, who abducted Seetha, Rama’s wife.

Piratti or Mahalakshmi wanted to test Sri Mahavishnu further, by reminding him that Vibishnan spoke bad about Her to Ravanna, when She was abducted and in prison in a place called Ashokavanam, in Sri Lanka.    Actually Brammah, Siva, Indran and hundreds of thousands of devas were all waiting to get a glimpse, the dharsan of Sri Mahalakshmi, whereas Vibishnan had told Ravanna that Seetha devi brought all the bad luck to Sri Lanka.   Mahalakshmi asked Sri Vishnu, whether Vibishnan, who spoke badly about her needed to be supported any further.

Originally, Vibishnan, being a good person, asked Ravana to let Sri Seetha to go.  But Ravana refused and then Vibishnan started by saying that as soon as she came to the country, the country was undergoing lots of trouble.  When Ravanna asked him further, Vibishnan highlighted the damage that was caused to Ashokavanam and the big fire that engulfed Sri Lanka when Anjaneya flew to Sri Lanka in search of Seetha.   Inspite of all these Ravana did not  listen and thereafter Vibishnan left his brother and surrendered himself to Rama.

Mahavishnu continued, by saying that generally Vibishnan would never say such things, if he had told, then it should only be for the sake doing good.   He might have thought by saying this, Ravana might agree to let Seetha free and send Her back to Sri Rama.   On hearing this, Sri Mahalakshmi was very happy and ensured that He would not let the Jeevathmaas who surrendered to Him.

What we need to learn from this episode is that generally Mahalakshmi would never complain, even if She complains about a Jeevathmaa, who surrendered and reached Him, would never be let down by Him.

Where do we find this ? In Divya Prabhandam, Periazhwaar, highlights in the hymn

Thannaiyaar Thirathagathu thaamaraiaal ahilum sithaguraikumel, ennadiyaar athu seiyaar; seithaarel nandru seithaar enbar bolum; mannudaiya Vibshanarkka mathil illangai thisai nokki malar kannn vaitha, ennudaya Thiruvarangarkkandriyum, matroruvarkku aal avaarey. (Periyazhwaar Thirumozhi, 4.9.2)

to reiterate that He is Achuthan and He will never let His Jeevathmaas.

Saranagathi : (Thanks to friends from Whatsapp group)

Parasara Bhattar is the son of Sri Koorthazhwaan, the chief disciple of Swami Ramanujar. The deities of Thiruvarangam, Thiruvaranathan and Ranganayaki Thaayar had considered Parasaera Bhattar as their son and took care of him ever since he was born. Once he had travelled to another place through a forest. He fainted there after seeing an incident. His disciples started searching for him as he did not return even after a long time. They found him fainted in the forest and brought him back to his home. After he woke up, the disciples asked him on what happened, like whether any dangerous animals attacked him or any danger came from the people who were living in the forest or any other natural disaster happened.

Bhattar said that nothing of those sorts of things happened, but he saw an incident, which made him faint. He described the incident as follows : a hunter caught a rabbit and put it in a bag and walked away. This was seen by the mother of that rabbit and it followed the hunter and begged the hunter to let the rabbit, which was caught earlier. It repeated requested the hunter to let the rabbit. The hunter on seeing the plight of the mother rabbit, let the child rabbit go out of his bag.

When Bhattar said that he fainted after this incident, his disciples wondered what was in this incident to faint. Bhattar asked his disciples, whether any one had taught on how to do ‘saranagathi’ or total surrender to the mother rabbit. He continued to ask whether anyone had taught the hunter the rule that he should honour and protect those who asked saranagathi or total surrender. There was no possibility for an affirmative answer for both the above questions. Still the hunter approved the total surrender of the rabbit and gave what it asked. doesn’t he ?

When a hunter who did not even know the concepts of total surrender, took care of the request of the rabbit and let go the rabbits, which also incidentally did not know what was total surrender, Bhattar amazed at the quantum of the Kindness that Emperumaan would exercise towards His devotees who were dependent on Him one hundred percent, and surrendered to His holy feet, and He is known for graciously and benevolently taking care of His devotees (saranagatha vathsalan). Bhattar continued to state that Emperumaan would never let His devotees down. Bhattar felt bad for having spent so much of his lifetime in being unaware of Emperumaan’s such enormous Kindness. He felt sorry at himself for not having the firm belief in his mind till then, that Emperumaan would certainly protect His devotees and He would never let His devotees down. Bhattar said the above as the reason for him to faint. The disciples of Bhattar wondered at the above explanation.

In Sanskrit, the word “itchutha’ means let it go and the word “achutha” means to hold firmly without dropping. Emperumaan is called “Achutha” because, He will never let down His devotees who surrendered to Him totally.

Thiruvenkadamudaiyaan depicts the meaning of this Thirunamam or His name “Achutha”. He is pointing His holy right hand towards His holy feet and recommending His devotees to surrender There. He is also keeping His holy left hand at his holy Left thigh to inform His assurance to His devotees that He would make the water level in the sea of birth and death to the height of the thigh, so that the devotees would be able to cross that sea without any issues and He would be there to protect them. So with this Thirunaamam we should learn that He would always protect His devotees without letting them down.

We can see here about the glories of Govinda, the other popular name of Him.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d