A Simple Devotee's Views
For English Version, kindly click here, thanks
(The above picture is Sri NamAzhwaar at Sri Puchong Srinivasa Perumal Temple, Kuala Lumpur, Malaysia during Vaikasi Visaka Purappadu)
ஜீவாத்மாக்களை மூன்றாக பிரிக்கலாம், ஒன்று நித்யசூரிகள், இரண்டாவது முக்தாத்மாக்கள், மூன்றாவது பக்தர்கள். நித்யசூரிகள் என்றென்றும் பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவர்கள்; அவருக்கு படுக்கையாகவும், ஆசனமாகவும் பாதுகையாகவும் எப்போதும் அவரை பிரியாதவருமான அனந்தாழ்வார், அவருக்கு வாகனமாக இருக்கும் கருடாழ்வார், மற்றும் அவருடைய எல்லா கட்டளைகளையும் நடத்தி கொண்டுவரும் தளபதியான விஷ்வக்ஸேனர் போன்றவர்கள் நித்யசூரிகள். முக்தாத்மாக்கள் என்பவர்கள் ஒரு காலத்தில் இந்த பூவுலகில் வாழ்ந்து, பிறகு வைகுந்தப் ப்ராப்தி அடைந்து (மோட்சம் அடைந்து) பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவர்கள். மற்ற எல்லா ஜீவாத்மாக்களும் நம்மைப் போன்று பக்தர்கள் ஆவார்கள்.
தானே இப்பூவுலகில் அவதரித்தும், நம்முடன் வாழ்ந்து காட்டியும் நம்மைப் போன்ற ஜீவாத்மாக்களால் பிரம்மத்தின் பரத்துவத்தையோ (உலகின் மிகப் பெரும் பொருள், சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து ..என்ற பாசுரத்தை .. நினைவில் கொள்க ) பிரம்மத்தை அடைவது எப்படி என்றோ சிந்திக்காமல் காலத்தை கழிக்கின்றார்கள். இப்படி இழந்து கொண்டு இருக்கிறோம் என்ற நினைவில்லாமல் ஜீவாத்மாக்கள் இருக்கும் போது, பரமாத்மாவோ வேறு என்ன செய்து இந்த ஜீவாத்மாக்களை தம்முடன் சேர்த்துக்கொள்ளுவது என்று எண்ணி தன்னுடன் இருக்கும் நித்யசூரிகளையும், தன்னுடைய அம்சங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அவர்களை ஆழ்வார்களாக பிறக்க வைத்தார்.
அவர்களுக்கு கொடுத்த முக்கிய பணி வட மொழியில் உள்ள வேதங்களை திராவிட மொழியான தமிழில் கொடுப்பது. வட மொழி தெரியாதவர்களுக்கு திராவிட மொழியின் மூலம் வேதத்தின் பொருளினை அறிந்து பிரம்மத்தை அடைய திராவிட வேதம் உறுதுணையாக இருக்க ஏற்பாடு செய்தார்.
ஆழ்வார்களும் திவ்ய பிரபந்தங்களை பாடினார்கள். அந்த திவ்யப் பிரபந்தங்களே திராவிட வேதமாகக் கருதப் படுகிறது. அந்த ஆழ்வார்கள் பக்தியில் மூழ்கி திளைத்தார்கள். அந்த பக்தியினால் பிறந்ததுவே திவ்யப்ரபந்தம். அதனால் அவர்களால் அந்த பிரபந்தங்களை பாடினாலும், அவர்கள் பக்தியில் மூழ்கியதால், அவர்களுக்கு அவற்றினை மக்களுக்கு போதிக்க இயலவில்லை. அவர்கள் பக்தியில் மகிழ்ச்சி அடைந்த ஆண்டவனும் அவர்களுக்கு மோட்சம் அருளினான். முன்பு பார்த்தது போல் ஆழ்வார்களைப் படைத்ததும் அவர்களை பிரபந்தம் பாட வைத்ததும், பரமாத்மா, நமக்கு செய்த மற்றொரு உதவி ( கிருபை ) ஆகும்.
தங்கள் மொழியில் வேதங்கள் கிடைத்தபின்னரும் மக்களால் அவைகளைப் புரிந்து கொண்டு அதன்படி நடக்க முடியவில்லை. அதனால் பிரம்மம் அந்த பிரபந்தங்களில் அர்த்தங்கள் இந்த ஜீவாத்மாக்களுக்கு புரிய தேவை ஆச்சார்யார்கள் என்பதை உணர்ந்து பரமாத்மா ஆசார்யர்களை படைத்தான். இது பரமாத்மா, நமக்கு செய்த மற்றொரு பெரிய உதவி ( கிருபை ) ஆகும்.
இங்கிருந்து நாம் நான்கு பிரிவுகளாய் பிரிந்து வைஷ்ணவத்தின் மேலும் சில பரிமாணங்களைப் பார்க்கலாம்.
Jeevathmaas are generally classified into three groups; First is Nithyasoories, the second is Mukthathmaakal, and the third is Bakthargal or Devotees. Nithyasooris are jeevathmaas, who have been delivering services to Him all the times or for ever. Ananthaazhwaan, the bed for Him whenever He sleeps, the throne for Him when he is sitting, Shoes for Him, when He walks is an example for Nithyasoori. Similarly Garudaazhwar acts as His vehicle and Vishvaksenar, His deputy acts as a commandar are some other examples for Nithyasoories. Mukthamaakal are jeevathmaas, who were living in this world earlier and now attained motsham or reached Srivaikundam and offering prayers and services to Him all the times. Other all Jeevathmaas are called Bakthas.
In spite of Paramathmaa, coming to this world and lived here along with us, Jeevathmaas could not understand the Greatness of Paramathmaa. More importantly Jeevathmaas did not even realise that they were not thinking about the ways to attain Motsham or avoid the rebirth or simply were not thinking about Paramathmaa.
But Paramathmaa keeps thinking on how to make the Jeevathmaas get the Motsham. He decides to use the parts of Himself and the Nithyasoories around him to get this done, by making them born in this world as Azhwaars. The primary task assigned to these Azhwaars was to translate the Vedas, that were created by Him in Sanskrit, into Tamil, the Dravidan language, so that many more people could understand Veda and follow as per what was told in Veda, which could help them to attain Motsham.
These Azhwaars came down to the earth and started creating the hymns, called Divya Prabhandams. Divya Prabhandams were the result of the Azhwars enjoying the God, His Beauty, His Activities and translated Vedas. Azhwaars enjoyed Him so much, through their love and affection, they could not take up the activities of preaching the Divya Prabhandams and their meanings to common man or Jeevathmaas. The creation of Azhwaars and the creation of the Divya Prabhandams are His Grace, great boon and help to the mankind by Him.
In spite of getting the Vedas in their own language (Tamil), common man could not understand fully and follow the Divya Prabhandams. Brahmam or Paramathma realised that the Jeevathmaas need someone to preach them what is told in Divya Prabhandams and He then decided to create Acharyaas to preach the vedas to common man. This is another big Help of His Grace to us.
From here, let us take four different paths to understand more about Vaishnavism.